ETV Bharat / city

போலீசையே மிரட்டும் காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு - வைரலாகும் வீடியோ

சென்னை: வண்ணாரப்பேட்டையில் உதவி ஆய்வாளரையே மிரட்டும் காங்கிரஸ் பிரமுகரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் உதவி ஆய்வாளரை மிரட்டும் காங்கிரஸ் பிரமுகர்

author img

By

Published : May 20, 2021, 7:52 PM IST

சென்னை - வண்ணாரப்பேட்டையில் உள்ள கண்ணன் ரவுண்டானா பகுதியில் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது ஊரடங்கை மீறி, சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து சோதனை செய்து, அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர்.

போலீசையே மிரட்டும் காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு

இந்நிலையில் அந்த நபருக்கு ஆதரவாக பேசுவதற்காக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபா என்பவர் அங்கு வந்தார்.

அவர் கரோனா சிகிச்சை பெறும் நபர்களுக்காக உணவு வாங்கச் சென்றதாகவும், பெட்டிசன் போட்டு தண்ணியில்லாத காட்டுக்கு, உதவி ஆய்வாளரை மாற்றி விடுவதாகக் கூறி மிரட்டல் விடுத்தும், ஸ்டாலின் காவல் துறையினர் தவறு செய்தால் கூட தட்டிக்கேட்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.

ஏற்கெனவே பலரை மனு போட்டு மாற்றி இருப்பதாகக் கூறி மிரட்டும் காங்கிரஸ் பிரமுகரின் வீடியோ பதிவானது, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க:ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.