ETV Bharat / city

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி - சபாநாயகர்

author img

By

Published : Aug 19, 2021, 4:51 PM IST

Updated : Aug 19, 2021, 5:18 PM IST

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினிப் பயிற்சி வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு இன்று (ஆக. 19) நடைபெற்ற பேரவை கூட்டத்தில் தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதியில் நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நான்காவது நாளான இன்று (ஆக. 19) திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது.

பேரவைக் கூட்டத்தில் கோடநாடு விவகாரம், உறுப்பினர்களின் கோரிக்கை, நெடுஞ்சாலை சீரமைப்பு உள்ளிட்ட விவாதங்களும் நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினிப் பயிற்சி - சபாநாயகர் அறிவிப்பு

இதைத்தொடர்ந்து, தற்போது சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சபாநாயகர் அறிவிப்பு

  • கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின் இறுதியில், சபாநாயகர் கூறிய அறிவிப்பானது, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி, கணினி பயிற்சி அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
  • வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் மாலை 4 மணிக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.
  • அதேபோல் புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்படும்

காகிதமில்லா சட்டப்பேரவையை உருவாக்கும் நோக்கில், சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

எனவே, கணினி தொடர்பான அனைத்து விவரங்கள், உறுப்பினர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கும் விதமாக இந்த கணினிப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கன்னியாகுமரி-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை செப்பனிடப்படும் - எ.வ. வேலு'

Last Updated : Aug 19, 2021, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.