Commonwealth Games Tamil Nadu player: சாதிக்க வயதும் கிடையாது பாலின வேறுபாடும் கிடையாது என காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழ்நாடு வீராங்கனை அபிராமி அஜித் தெரிவித்துள்ளார். இவர் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியைக் காணலாம்.
கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி சாதனை படைத்த பெண்கள் அதிகமாக உள்ளனர். ஆசியப் போட்டியில் பளுதூக்கும் விளையாட்டில் இரு தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அபிராமி அஜித் என்ற கல்லூரி மாணவி, தற்போது காமன்வெல்த் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.
ஆசிய அளவிலான போட்டியில் இரு தங்கப்பதக்கம்
சென்னை மாதவரத்தில் வசிக்கும் அஜித், அஜிதா என்ற தம்பதியின் இரண்டாவது மகள் அபிராமி அஜித், இவர் தனியார் கல்லூரிகள் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இஸ்தான்புல் துருக்கியில் கடந்த வருடம் நடைபெற்ற ஆசிய அளவிலான பவர் லிப்டிங் பெஞ்ச் பிரஸ் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
பளு தூக்குதல் போட்டியில் ஆர்வம்
அபிராமி அஜித்தும் மற்ற இளம் பெண்களைப் போலவே ஊரடங்கு நேரத்தில் வீட்டிலிருந்துள்ளார். இருப்பினும் தன்னுடைய உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி கூடத்துக்கு (gym) சென்றுள்ளார்.
அந்த உடற்பயிற்சி மையத்தில் இயல்பாக உடற்பயிற்சியை செய்துகொண்டிருந்த நிலையில் சக ஆண் நண்பர்கள் தூக்கும் எடை அதிகம் உள்ள பாரத்தை தூக்கி உடற்பயிற்சி செய்ய மேற்கொண்டார்.
இதனைப் பார்த்த அவரது ஆண் நண்பர்கள், "பேசாம நீ பளுதூக்கும் போட்டியில் பங்கு எடுத்துக் கொண்டால் பல்வேறு வெற்றி வாய்ப்பு உனக்கு வரும் என்று தன்னம்பிக்கையை ஊட்டி உள்ளனர். இதனை அடுத்து கடினமான பயிற்சியில் ஈடுபட்டார் அவர்.
முதல் வெற்றி
பளுதூக்கும் போட்டியில் மிகுந்த ஆர்வத்தோடும் கடின உழைப்பால், பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் தங்கப்பதக்கத்தை வெற்றிபெற்றார்.
இதனையடுத்து, கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று ஆசிய அளவிலான போட்டிக்கு ஜூனியர் லெவல் 76 கிலோபவர் லிப்டிங் பெஞ்ச் பிரஸ் போட்டியில் பங்கேற்று இரு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
சாதிக்க தடை கிடையாது, நாட்டிற்காக தங்களால் முடிந்ததை செய்யலாம்:
இது குறித்து அபிராமி அஜித் நம்மிடம் பேசுகையில், ”நான் உடம்பைக் குறைக்க ஜிம்முக்கு போயிருந்தேன், ஆனா, அங்க என்னுடைய நண்பர்களைப் பார்த்து அதிகமான எடையைத் தூக்க ஆரம்பிச்சேன். அவர்களுக்கு நிகராக நானும் அதிகமான எடையைத் தூக்கி ஆரம்பிச்சுது, என்னுடைய நண்பருக்கு வியப்பாக இருந்தது.
தொடர்ச்சியாக நானும் அதிகமாக வெயிட் தூக்க ஆரம்பிக்கும்போது என்னோட நண்பர்கள் எனக்கு ரொம்ப ஊக்கம் கொடுத்து, வெயிட் லிப்டிங் போட்டியில் பங்கெடுத்துக்கோனு சொன்னாங்க. அப்புறம் எனக்கு ஜிம்ல இருக்கற ஒரு மாஸ்டர் பயிற்சி கொடுத்தார். தொடர் பயிற்சி, கடின உழைப்பால், என்னுடைய முதல் வெற்றியைப் பல்கலைக்கழங்களில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றேன்.
இந்த ஒரு வெற்றி மூலம் அடுத்தடுத்து வெற்றியைப் பிடிக்க நல்வாய்ப்பாக அமைந்தது. தொடர்ச்சியாகப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை 17 பதக்கங்கள் பெற்றுள்ளேன். குறிப்பாக தேசிய விளையாட்டில் தங்கப்பதக்கம், ஆசிய அளவிலான போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று இரு தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக துருக்கி நாட்டிலிருந்து வந்த நாங்கள் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து, நாங்கள் பெற்ற பதக்கங்களைக் காட்டி வாழ்த்துப் பெற்றோம். முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் இது எனக்கு அதிக ஊக்கத்தைத் தருகிறது.
இந்த விளையாட்டில் நான் சாதிக்க காரணமாக இருப்பது, எனது நண்பர்கள் என்னுடைய தாய், தந்தையர், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்தான் ஊக்கம் அளித்துவருகின்றனர். மேலும் என்னுடைய தாத்தா கேரள மாநிலத்தில் என்னுடைய வெற்றியைக் கொண்டாடும்வகையில் எனக்கு ஒரு பாராட்டு விழா வைத்து அங்கு அரசியல் தலைவர்கள் வந்து, என்னைப் பாராட்டியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த நிகழ்விலிருந்து என்னுடைய விளையாட்டில் இன்னும் அதிகமாக சாதிக்கணும்னு நெனச்சு, விடாம பயிற்சி எடுத்துட்டுவரேன். இந்த விளையாட்டைப் பொறுத்தவரை, வயது தடையில்லை. 10 வயதிற்கு மேல் 60 வயது வரை அதற்கும் மேல் உள்ள வரும் இந்தப் போட்டியில் பங்கேற்று நாட்டிற்காக விளையாட முடியும்.
எங்க தாத்தா ஒரு ராணுவ வீரர், அவரைப் போல நானும் ராணுவத்தில் சேரனும் நினைத்தேன் முடியல, ஆனால் நாட்டுக்காக ஏதாவது செய்யணும் நினைச்சு இருந்தப்போ இந்தப் போட்டி மூலம் இப்போ நாட்டுக்காக தங்கம் வென்று இருக்கேன்.
ஆக இங்கே வயது தடையல்ல நீங்களும் இந்த நாட்டுக்கு பெருமை தேடித் தர முடியும், தொடர்ச்சியான முயற்சியும் கடின உழைப்பும் அதற்கு அவசியம் என்று சொல்லி முடித்தார்.
இதையும் படிங்க: அடுத்தவர் குழந்தையும் தங்களது என ஸ்டிக்கர் ஒட்டாதே விடியா அரசே! - இபிஎஸ்