ETV Bharat / city

சென்னை வளர்ச்சி குழும தலைமை நிர்வாகியாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி நியமனம் - ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அலுவலராக மாவட்ட ஆட்சியர் லட்சுமியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
author img

By

Published : Aug 8, 2021, 11:36 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு துறை அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், ஆதிதிராவிடர் நலத்துறை இணை ஆணையர் பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் செந்தாமரை, நில நிர்வாக துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுப்பணித் துறை பிரிவு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அருணா விவசாயத் துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதவத், விவசாயத் துறை இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வி துறை இணை செயலாளர் பொறுப்பில் இருந்த மாவட்ட ஆட்சியர் அன்னே மேரி ஸ்வர்ணா, வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டு துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் ஜான் லூயிஸ், உள்ளாட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியர் லட்சுமி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும சிறப்பு நிர்வாக அலுவலராக நியமித்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: பணி நேரத்தில் குதுகல படகு சவாரி- சிக்கிய அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.