சென்னை: பல்வேறு இடங்களில் பரவலாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகராட்சி அலுவலர்களும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அலுவலர்களும் முழுவீச்சில் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் நேரில் ஆய்வு
அந்த வகையில் Rain வெள்ளப்பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
முதலாவதாக புளியந்தோப்பு பார்த்தசாரதி தெரு சந்திப்பு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஆகியப் பகுதிகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு, மேட்டுப்பாளையம் சந்திப்பு ஆகிய இடங்களில் Rain Waterஐ வெளியேற்றும் பணிகளைப் பார்வையிட்டார்.
அதன் பின் தனது சொந்தத்தொகுதியான கொளத்தூர் தொகுதி சிவ இளங்கோ 70 அடி சாலையில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழை நீர் வெளியேற்றும் பணிகளைப் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து பெரவள்ளூர் காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வெளியேற்றும் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ச்சியாக அசோக அவென்யூ, ஜி கே எம்.காலனி 24ஆவது தெரு ஆகியப்பகுதிகளில் மழையால் தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு