ETV Bharat / city

அர்ச்சகர்களுக்கு சீருடை - திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் - இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

அர்ச்சகர்களுக்கு சீருடை, இந்து சமய அறநிலையத்துறை, முதலமைச்சர் ஸ்டாலின், Cm Stalin started Uniform scheme for Priests, Uniform for Temple Workers and Priests
அர்ச்சகர்களுக்கு சீருடை
author img

By

Published : Jan 4, 2022, 2:12 PM IST

Updated : Jan 4, 2022, 2:37 PM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனை செயல்படுத்தும் வகையில், கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு பொங்கல் பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி முதல் சீருடை அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.

அர்ச்சகர்களுக்கு சீருடை, இந்து சமய அறநிலையத்துறை, முதலமைச்சர் ஸ்டாலின், Cm Stalin started Uniform scheme for Priests, Uniform for Temple Workers and Priests
அர்ச்சகர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்த முதலைமைச்சர் ஸ்டாலின்

திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர்

குறிப்பாக, கோயில்களில் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் பட்டியல் அடிப்படையில் அர்ச்சகர்களுக்கு ஜோடி புத்தாடைகள், பணியாளர்களுக்கு இரண்டு ஜோடி சீருடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி தரமான சீருடைகளை அந்தந்த கோயில் நிதி மூலம் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அர்ச்சகர்களுக்கு சீருடை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

அதன்படி, ஆண் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் ஆகியோருக்கு ஒன்றரை அகலத்தில் மயில்கண் பார்டர் பருத்தி வேஷ்டியும், பெண் பூசாரிகள், பணியாளர்கள் ஆகியோருக்கு அரக்கு நிறத்தில், மஞ்சள் நிறபார்டருடன் கூடிய புடவை, ஆண் பணியாளர்களுக்கு பிரவுன் நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணி ஆகியவை வழங்கப்பட உள்ளது.

அர்ச்சகர்கள் பேட்டி

இந்நிலையில், இலவச சீருடை வழங்கும் திட்டத்தினை சென்னை தலைமை செயலக்த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (ஜன.4) தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திர மோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: Pongal Gift Hamper: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்

Last Updated : Jan 4, 2022, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.