ETV Bharat / city

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம் - மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பு

மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

தீர்மானம்
தீர்மானம்
author img

By

Published : Apr 11, 2022, 1:12 PM IST

Updated : Apr 11, 2022, 1:25 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, மத்திய பல்கலைக்கழங்களில் இளநிலை படிப்புக்கு நுழைவுத் தேர்வை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், மானியக் குழுவின் நிதி உதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யூ.இ.டி) மூலம் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்தி கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது. பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள்.

இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள். என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு நம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும்.

இந்த நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும்.

மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழ்நாடு மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினை செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எனவே மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு, மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர்வதற்காக நடத்த இருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட மத்திய அரசினை வலியுறுத்துகிறோம்" என்றார். இதற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்து சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிகள்: சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு

Last Updated : Apr 11, 2022, 1:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.