சென்னை: 2003ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசால் கொண்டவரப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத்திருத்த முன்வடிவை நிறுத்திவைக்குமாறு, மு.க. ஸ்டாலின் நரேந்திர மோடிக்கு இன்று (டிசம்பர் 8) கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத் துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் இருப்பதோடு, மாநில அரசு நிறுவனங்களின செயல்பாடுகளின் தலையிடுவதாகவும் உள்ளதால், இந்தச் சட்டத் திருத்த முன்வடிவினைத் திரும்பப் பெறுமாறு ஸ்டாலின் நரேந்திர மோடியிடம் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.