சென்னை: பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச் சூழல் பாதிப்படைவதை தடுக்கும் நோக்குடன் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஞ்சப்பை இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (டிச 23) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைக்கிறார். முன்னதாக, அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
கரோனாவால் தேங்கிய பணிகள்
எனினும், கோவிட் 19 பரவல் காரணமாக பிளாஸ்டிக் பொருள்களின் தடையை நடைமுறைப்படுத்தும் பணிகளில் தேக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, மீண்டும் இத்தடையை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காண்பித்து வருகிறது.
இதன் ஒரு அங்கமாக, ’மீண்டும் மஞ்சப்பை’ என்னும் பரப்புரையுடன் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க மதுரையில் தனி நீதிபதியை நியமிக்க கோரிக்கை