சென்னை: இந்தியாவில் மாநில அரசு மருத்துவமனைகளில் முதலாவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் (Robotics) அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்துவைத்தார்.
ரோபோடிக்ஸின் தேவை
இந்த அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையம் மூலமாக அறுவை சிகிச்சை நிபுணர்களால், கடினமான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாகவும் நுணுக்கமாகவும், ரோபோடிக் கருவிகள் மூலம் மேற்கொள்ள இயலும். லேபராஸ்கோபியின் அதிநவீன முன்னேற்றமே ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகும்.
-
இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக - இருதயம், சிறுநீரகம், குடல், புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக மேற்கோள்ளும்- அதிநவீன ரோபாடிக் அறுவை சிகிச்சை மையத்தினை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் திறந்துவைத்தேன்!
— M.K.Stalin (@mkstalin) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
அனைவருக்கும் உலகத்தர மருத்துவம்! pic.twitter.com/nDesLR1hZ3
">இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக - இருதயம், சிறுநீரகம், குடல், புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக மேற்கோள்ளும்- அதிநவீன ரோபாடிக் அறுவை சிகிச்சை மையத்தினை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் திறந்துவைத்தேன்!
— M.K.Stalin (@mkstalin) March 15, 2022
அனைவருக்கும் உலகத்தர மருத்துவம்! pic.twitter.com/nDesLR1hZ3இந்தியாவில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக - இருதயம், சிறுநீரகம், குடல், புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளைத் துல்லியமாக மேற்கோள்ளும்- அதிநவீன ரோபாடிக் அறுவை சிகிச்சை மையத்தினை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் திறந்துவைத்தேன்!
— M.K.Stalin (@mkstalin) March 15, 2022
அனைவருக்கும் உலகத்தர மருத்துவம்! pic.twitter.com/nDesLR1hZ3
அறுவை சிகிச்சையின் போது உறுப்புகளை அகற்ற நேரிட்டால், அவற்றின் ரத்த நாளங்களின் ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம், ரத்த இழப்பினை தடுத்து பலவீனமடைந்த உறுப்பினை அகற்ற முடியும். அப்படி செய்யும்போது அதன் நரம்பு நாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றை திறம்பட செயல்படுத்த 3D விரிவாக்கம் அவசியமாகிறது. இதற்கு, இந்த நவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை உதவும்.
விரைவாக வீடு திரும்பலாம்
அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் 120 டிகிரி மட்டுமே சுழன்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் நிலையில், ரோபோடிக் சிகிச்சையில் உள்ள 'ENDO WRIST' மூலம் 360 டிகிரி வரை சுழன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். மேலும், இதில் 3D விரிவாக்கம் உள்ளதால் மிக எளிதில் துல்லியமாக நாளங்களின் அமைப்புகளை கண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலும்.
ரோபோடிக் அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் உடம்பில் சிறிய தழும்புகளே ஏற்படுவதால், ரத்த இழப்பு, வலி மற்றும் நோய்த்தொற்று (Post operative Infection) பெரிதும் குறைவதோடு, அறுவை சிகிச்சையின் பின் வலி நிவாரண ஊசிகள் அதிகம் தேவைப்படுவதில்லை. மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பலாம்.
சிறுநீரக அறுவை சிகிச்சை, குடல்நோய் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை ஆகிய அறுவை சிகிச்சைகளுக்கு இந்த அதிநவீன இயந்திரம் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.