சென்னை : கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி இறுதியாண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
பொதுவாக ஜூலை இரண்டாவது வாரத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும். கடந்த வாரம் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் முறை வெளியிடப்பட்டு, ஜூலை 31ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த சுமார் 9 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின், கல்வித்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூடட்ததில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : 'டேக்' செய்த ஜெர்மன் வாழ் தமிழ் பெண்.. உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்..