ETV Bharat / city

"அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியதாக ஏமாற்ற விரும்பவில்லை" முதலமைச்சர் ஸ்டாலின் - அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியதாக மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று மு.க.ஸ்டாலின் பேச்சு

தேனியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியதாக கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Apr 30, 2022, 6:15 PM IST

தேனி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை இன்று (ஏப்.30) தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டங்களில் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. ரூ. 8 கோடி செலவில் பெரியகுளம் அரசு மருத்துவமனையும், ரூ.4 கோடி செலவில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையும் மேம்படுத்தப்படும்.

குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு: போடிநாயக்கனூர் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டி அருகில் கொட்டக்குடி ஆற்றின் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்படும். ஆண்டிபட்டியில் உள்ள வைகை உயர் தொழில்நுட்ப விசைத்தறி பூங்காவைத் தொடர்ந்து செயல்படச் செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

வீரநாயக்கன்பட்டியில் உள்ள குறவர்கள் காலனி திட்டப் பகுதியில், நரிக்குறவர் மற்றும் குறவர்களுக்காக குடியிருப்பு கட்டப்படும். முதல்கட்டமாக 175 குடியிருப்புகளுக்கான தொகை ரூ.3.5 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

தலைவர் கலைஞர்: முன்னாள் முதலமைச்சரும் எனது தந்தையுமான கருணாநிதியின் பெயரை சொன்ன காரணத்தால், அவருடன் காரில் வந்த ஒருவரை எம்.ஜி.ஆர் இறக்கி விட்டார். அப்படிப்பட்ட நாகரீகத்தை இன்றைக்கு இருக்கக்கூடியவர்களிடத்தில் எதிர்பார்க்க முடியாது.

மக்கள் ஒத்துழைக்கவேண்டும்: "எனது தொலைநோக்குப் பார்வை என்பது 'அனைத்திலும் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயரை நாம் பெற வேண்டும். அப்படி உருவாக்குவதற்காக என்னை அர்ப்பணித்து செயல்படுவேன். அதேபோல என்னோடு அமைச்சர்கள், சட்ட்பபேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நீங்க வராதீங்க; நாங்க வர்றோம்' - நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் பேச்சு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.