சென்னை: உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. நாட்டில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 2.80 லட்சமாக உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனால் மாநில் அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்களை மூடுதல், இரவு ஊரடங்கு, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதோபோல பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தஉள்ளார். இந்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இதில் துறை சார்ந்த அமைச்சர்கள், அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: Night curfew: தமிழ்நாட்டில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?