தலைமைச் செயலகத்தில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், 27 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து