ETV Bharat / city

நரிக்குறவர், இருளர் மக்களுக்கு முதலமைச்சரின் தீபாவளி பரிசு! - அஸ்வினி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

நரிக்குறவர், இருளர் மக்களுக்கு முதலமைச்சரின் தீபாவளி பரிசு

author img

By

Published : Nov 4, 2021, 1:07 PM IST

Updated : Nov 4, 2021, 1:25 PM IST

செங்கல்பட்டு: பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச் சான்றிதழ், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவி, கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (நவ. 4) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,நரிக்குறவர், இருளர் சமூகத்தைச் சேர்ந்த 282 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்பவருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியபோது, அஸ்வினி கண்ணீர் மல்க மேடையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.அப்போது முதலமைச்சருக்கு அவர் பாசி மாலை அணிவித்தார்.

யார் இந்த அஸ்வினி?

முன்னதாக, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் அரசின் அன்னதானத்தில் உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும், மற்றவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் அஸ்வினி பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

அஸ்வினி உள்ளிட்ட பொதுமக்களோடு அமைச்சர் சேகர்பாபு, அமர்ந்து உணவருந்தி, கோயில் அன்னதானம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Nov 4, 2021, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.