திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று (பிப்.3) அனுசரிக்கப்படுகிறது. அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளனர்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
![முதலமைச்சர் ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10480311_cmtweetanna.jpg)
அண்ணா நினைவு நாள் குறித்து ட்வீட் செய்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
![துணை முதலமைச்சர் ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10480311_opstweetanna.jpg)
இதையும் படிங்க...காஷ்மீர்மயமாகும் டெல்லி... விவசாயிகளைத் தடுக்க இரும்பு முள்வேலி: குரல் கொடுத்த ராகுல்!