சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று CM Dashboard திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இந்த சிஎம் டேஷ்போர்டு திட்டம் மூலம், சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளின் திட்டங்கள், நடவடிக்கைகளை முதலமைச்சர் அலுவலக அறையில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.
அத்துடன் முன்னதாகத் தொடங்கப்பட்ட திட்டங்களின் நிலைப்பாடு, வரப்போகும் திட்டங்களின் முன்னோட்டம் குறித்தும் அறிந்துகொள்ள முடியும். அப்படி ஓராண்டிற்கான திட்ட நடவடிக்கைகள் சிஎம் டேஷ்போர்டில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இதேபோல, மத்தியப் பிரதேசம், ஆந்திரா மாநிலம், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர் தகவல் தகவல் பலகை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு