சென்னை: கரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் விஜயகாந்த் பூரண நலம்பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ட்வீட் செய்துள்ளனர்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததினால், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, செப்டம்பர் 22ஆம் தேதி தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் அவர் மீண்டு வர வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும், விஜயகாந்த் மீண்டு வர தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பிரார்த்தனை பதிவிட்டுள்ளனர்.
அதன்படி, 'தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறோம்' என்று அப்பதிவுகளில் கூறப்பட்டிருந்தது.


