ETV Bharat / city

மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் நீதிபதிகள் பணிமூப்பு

போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சிவில் நீதிபதிகளின் பணி மூப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 24, 2021, 5:08 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை சிவில் நீதிபதிகள் பணிக்கான தேர்வு 2009ஆம் ஆண்டு நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பணி மூப்பு நிர்ணயத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், "பணிமூப்புக்கு இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த, சுழற்சி நடைமுறையை பின்பற்றுவதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்னுக்கு தள்ளப்படுவர்.

எனவே போட்டித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணிமூப்பை நிர்ணயிக்க வேண்டும். ஒருவேளை இரு விண்ணப்பதாரர்கள், ஒரே மதிப்பெண்களை பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அத்துடன் 2009ஆம் ஆண்டுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளநிலை சிவில் நீதிபதிகளின் பணிமூப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகள் “தற்போதைய பணிமூப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட பதவி உயர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். வரும் காலங்களில் திருத்தியமைக்கப்பட்ட பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: காவல்துறைக்கு எதிரான வழக்குள் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.