ETV Bharat / city

மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்களை நீக்கியதை எதிர்த்து போராட்டம் - தற்காலிக பணியாளர்களை நீக்கியதற்கு எதிர்ப்பு போராட்டம்

சென்னை: மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்களை பணியில் இருந்து நீக்கப்படும் நிலை தொடருமானால் 12,600 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என சிஐடியு செங்கொடி தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்
மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்
author img

By

Published : Feb 9, 2021, 10:38 PM IST

மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் முன்னறிவிப்பின்றி வேலையிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சிஐடியு செங்கொடி தலைவர் மகேந்திரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் அருகில் சிஐடியு செங்கொடி சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சிக்கு எதிராகவும் மாநகராட்சி ஆணையருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன், "தற்காலிக பணியாளர்கள் மாநகராட்சில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். மண்டலம் 8இல் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 560 நபர்களை முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் செங்கொடி சங்கம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போராடி வருகின்றோம். பணி மீண்டும் வழங்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

மாநகராட்சி வயது முதிர்ந்தவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மட்டுமே நாங்கள் பணியிலிருந்து நீக்கியதாக சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் மண்டலம் எட்டில் இருக்கக்கூடிய 561 தூய்மைப் பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். மண்டலம், ஐந்தாம் மண்டலம் நாளிலும் இந்தப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மண்டலம் 9இல் இருந்து 15 வரை இருக்கக்கூடிய தூய்மை பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்ட காரணத்தால் அங்கு இருக்கக்கூடிய நிரந்தரப் பணியாளர்கள் மண்டலம் 4,5 மற்றும் 8க்கு மாற்றப்பட்ட காரணத்தினால் இந்த பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இதனை உடனடியாக ரத்து செய்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சென்னை மாநகராட்சியில் 720 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை தொடர்ந்தால் 12 ஆயிரத்து 600 தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான தூய்மைப் பணியாளர்களான பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவை மாநகராட்சி அலுலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.