வியாசர்பாடி அசோக் பில்லர் ஜங்ஷன் வழியாக வாகனத்தில் சிலர் கஞ்சா கடத்துவதாக, வியாசர்பாடி காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக அந்த வழியே வந்த ஆட்டோவை மடக்கி காவல்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் 11 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த அம்பத்தூரைச் சேர்ந்த பொன் முருகேசன் (43), பாடியைச் சேர்ந்த மனோகரன்(36), மணிமாறன்( 43), பத்மனாபன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
![கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சினிமா இயக்குநர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-cinemadirector-arrest-script-7202290_30122020101158_3012f_1609303318_854.jpg)