சென்னை: திருப்பூரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் உணவு ஒவ்வாமையால் குழந்தைகளுக்கு மயக்கம், வாந்தி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில், 3 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுமார் 11 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக பாதுகாப்பு நலத்துறையின் இயக்குநர் வளர்மதி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருகிறது.
இக்குழு நேரடியாக காப்பகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கவுள்ளனர். அதன் பின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு