ETV Bharat / city

மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தளர்வு: தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: முழு ஊரடங்கு காலத்தில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தளர்வு குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

Chief Secretary shanmugam
Chief Secretary shanmugam
author img

By

Published : Jun 18, 2020, 7:47 AM IST

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பினால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு இடையே தொழில் ரீதியிலான போக்குவரத்துக்குத் தடை இல்லை. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வருவோருக்கான தடை உத்தரவு தொடரும்.

இந்த ஊரடங்கின் முக்கிய நோக்கம், நோய்ப் பரவுவதைக் குறைப்பதற்காக மாவட்டங்களின் உள்ளேயும் வெளியேயும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதாகும். அதே நேரத்தில் கட்டுப்பாட்டுப் பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் போன்றவற்றில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை மாநகர காவல் துறை வரம்பு எல்லை பல அடுக்கு சோதனை மூலம் பலப்படுத்தப்பட வேண்டும். முக்கியமான இடங்களில் தடுப்புகளை வைப்பதன் மூலம் உள் இயக்கம் கட்டுப்படுத்தப்படும்.

வீட்டுச் சிகிச்சையில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் வீடுகள், கடுமையான கட்டுப்பாட்டுப் பகுதிகள், தனிமைப்படுத்தல் இடங்களில் அத்தியாவசிய பொருள்களின் சுமுக விநியோகத்தை சமூக விழிப்புணர்வு மூலம் ஒருங்கிணைத்தல் அவசியம்.

மேலும் தொற்று பரவுவதைக் குறைக்க சோதனை முடிவுகள் பெறும்வரை, அறிகுறிகளுடன் சோதனைக்கு வரும் நபர்களின் தனிமைப்படுத்தலை உறுதிசெய்ய வேண்டும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் திறமையான தொடர்புத் தடமறிதல், அனைத்து வீட்டுத் தொடர்புகள், பிற தொடர்புகள் உள்ளிட்டவற்றில் நூறு விழுக்காடு அடையாளம் கண்டுகொள்வதையும் 24 மணி நேரத்திற்குள் தனிமைப்படுத்துவதையும் உறுதிசெய்ய வேண்டும். பரவும் நோய் குறித்து மக்களுக்கு அவர்களின் பொறுப்பு குறித்து கல்வி கற்பித்தல் அவசியம்.

தன்னார்வலர்களின் உதவியுடன் மண்டலக் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கவுன்சிலிங் தேவைப்படும் நோயாளிகளுக்கு உளவியல் ஆலோசனை அளிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கட்டுப்பாடு, தனிமைப்படுத்தல் மேலாண்மை இயக்க கட்டுப்பாட்டை கண்டிப்பாக அமல்படுத்துதல் வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருள்களின் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 21 குண்டுகள் முழங்க கரோனாவால் மரணித்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல் நல்லடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.