ETV Bharat / state

எச். ராஜாவின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..! - H RAJA JAIL SENTENCE

பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எச். ராஜா, சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
எச். ராஜா, சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 17 hours ago

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா, கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ''பெரியார் சிலையை உடைப்பேன்'' என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்களின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இரு வழக்குகளிலும் எச். ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து எச். ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், '' சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து ஐந்து மாதங்களுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாமதத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்கள் இரவு 7.30 மணிக்குள் விடுதியில் இருக்க வேண்டும் - அண்ணா பல்கலை. உத்தரவு..!

மேலும், மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்காளோ இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது எனவும், சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், அப்பீல் வழக்கு முடிவு காணும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தபோது, எச். ராஜா தரப்பில், விசாரணை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளதாகவும், இந்த உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை மனுதாரருக்கு விதிக்கபட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், ஹெ.ச்.ராஜாவின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.