ETV Bharat / city

’கரோனாவால் வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வியூகம்’

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

secretary
secretary
author img

By

Published : May 16, 2020, 5:15 PM IST

கரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்த்திட முடிவெடுத்துள்ளன. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி, அம்முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர் தலைமையில், உயர் அலுவலர்கள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்பினர்கள் அடங்கிய, சிறப்பு பணிக் குழு (Special Investment Promotion Task Force) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பணிக்குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது மற்றும் அந்த நிறுவனத்திற்கு அரசின் உதவி போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வியூகம் அமைப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இக்குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

’கரோனாவால் வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வியூகம்’

தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசு உயர் அலுவலர்கள், கொரிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ஜங்ஹி ஹான், தைவான் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் தாவே ஸாய், ஹூண்டாய் நிறுவன மேலாண் இயக்குநர் கிம், தொழிலதிபர்கள் திருமதி. மல்லிகா சீனிவாசன் (USIBC), சக்திவேல் (IACC), ஸ்ரீதர் வேம்பு (ZOHO), ஹரி தியாகராஜன் (CII), பொன்னுசாமி (CII), பீட்டர் நிக்கல்சன் (Cheyyar SEZ) வைபவ் மித்தல் (Mahindra), குருராஜ் (WISTRON), அர்ஜித் சென் (FLEX), சீனிவாசன் சுந்தரம், (Lincoln Electric), USISPF மற்றும் Enterprise Singapore அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நாள்தோறும் 10,000 தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.