தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
- ஆசிரியர்கள், மாணவர்கள் என 46.37 லட்சம் பேருக்கு மறுசுழற்சி முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும்.
- வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை, அந்த மாணவர்கள் நேரடியாகத் தேர்வு எழுதலாம். ஆனால், அவர்களைத் தனி அறையில் அமர வைக்க வேண்டும்.
- விடுதிகளில் தங்கும் மாணவர்களுக்காக அனைத்து வகை விடுதிகளையும் ஜூன் 11ஆம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும்.
- பத்தாம் வகுப்பு தேர்வை கண்காணிக்கும் பணியில் 2.26 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். விடைத்தாள் திருத்தும் பணியில் 62 ஆயிரத்து 107 பேர் ஈடுபடுவார்கள்.