சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் கடந்த 2013-2014ஆம் ஆண்டு முதல் 2017-18ஆம் ஆண்டுகள் வரையிலான சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சிறந்த பயிற்றுநர்கள், சிறந்த உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் விருதுகளையும், விருதாளர்களுக்கு ஊக்கத் தொகை, பதக்கங்கள், பாராட்டுப் பத்திரங்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இது குறித்து விருது பெற்ற விளையாட்டு வீராங்கனை காயத்ரி கூறுகையில், “தமிழ்நாடு அரசாங்கம் விளையாட்டுத் துறைக்கு அதிக சலுகைகளை வழங்கி புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகின்றனர். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு பண உதவி வழங்குவதால் விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளவும், பயிற்சிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவிட் உமன் வாரியர்ஸ்... பழங்குடியின மக்களின் நலனுக்காக தினமும் 12 கி.மீ., நடந்த ஆசிரியருக்கு மத்திய அரசு விருது!