ETV Bharat / city

உலக முதியோர் தினம் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து - எடப்பாடி பழனிசாமி

சென்னை: பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகளான மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

day
day
author img

By

Published : Sep 30, 2020, 1:39 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள உலக முதியோர் தின வாழ்த்துச்செய்தியில், “முதியோரின் நலன் காக்கவும், அவர்களின் சேவைகளை அங்கீகரிக்கவும், ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் உலக முதியோர் தினமான இந்நன்நாளில், அனைத்து முதியோருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களை கவனமுடன் பேணிக்காப்பதை நாம் அனைவரும் தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திட தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடவும், அவர்கள் பயனடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

சிறந்த முறையில் முதியோர் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதை பாராட்டி, மத்திய அரசு 2019 ஆம் ஆண்டிற்கான ’வயோஸ்ரேஷ்தா சம்மன் விருது’ தமிழ்நாடு அரசிற்கு வழங்கி கௌரவித்துள்ளது. பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகளான அம்மூத்த குடிமக்களின் பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை “ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பணி புரிந்தவர்களுக்கு விருது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.