சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் இருந்து நாளை (செப்-7) காலை 11மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்ல உள்ளார். கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரையை தொடங்கி வைத்த பிறகு அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலிக்கு வருகை தந்து இரவு திருநெல்வேலியில் தங்குகிறார்.
8ஆம் தேதி காலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறார். பின்னர் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு செல்வார். மதுரை வரும் வழியில் விருதுநகரில் மதிய உணவு சாப்பிடுகிறார். 9ம் தேதி காலை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தியின் இல்லத் திருமண நிகழ்ச்சியை முதலமைச்சர் தலைமை தாங்கி நடத்தி வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து வேலம்மாள் குழும இல்ல திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்., அதனைத் தொடர்ந்து
முதலமைச்சர், மதுரையில் அருங்காட்சியகப் பணிகளையும் தொடங்கி வைத்து, கலைஞர் நூலகத்தையும் பார்வையிடுகிறார். அதன்பின்னர் முதலமைச்சர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இதையும் படிங்க:மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம் - எம்பி ரவீந்திரநாத்