ETV Bharat / city

அண்ணன் அழகிரியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்

சென்னை லயோலா கல்லூரியின் வணிக மேலாண்மைப் பிரிவின் (LIBA) புதிய கட்டடத்தைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

author img

By

Published : Oct 16, 2021, 8:34 AM IST

Updated : Oct 16, 2021, 9:01 AM IST

எனது அண்ணன் அழகிரி  ஸ்டாலின்  brother Alagiri  Chief Minister Stalin
ஸ்டாலின்

சென்னை: லயோலா கல்லூரியின் வணிக மேலாண்மைப் பிரிவுக்கு (LIBA) புதிய கட்டடத்தைச் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் லயோலா கல்லூரிக்கும் நீண்ட தொடர்புண்டு. அவர் லயோலா கல்லூரியில் தொழில்நுட்ப கட்டடத்தைத் திறந்துவைத்தார்.

ஆனால் 10 ஆண்டுகள் கழித்து லயோலா கல்லூரியின் மேலாண்மைப் பிரிவு கட்டடத்தை நான் திறந்துவைக்கிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை

தற்போது இந்தக் கூட்டத்தில் பேசிய பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வில்சன் எம்பி ஆகியோர் இங்குதான் படித்ததாகத் தெரிவித்தனர். என் அண்ணன் அழகிரி இங்குதான் படித்தார். அதேபோல் தம்பி கலாநிதி மாறன், தயாநிதி மாறன், என் மகன் உதயநிதி இங்குதான் படித்தனர். எனக்கு தற்போது ஏக்கம் நான் ஏன் படிக்கவில்லை என்று. ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் வாழ்வில் மறக்க முடியாத கல்லூரி லயோலாதான்.

அதற்கு தயாநிதி மாறன் சொன்னதுபோல ஒவ்வொரு முறை தேர்தலின்போது லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வெற்றி தோல்வி கல்லூரி மூலமே செய்தி வெளிவரும். எனவே இந்தக் கல்லூரியை மறக்க முடியாது.

திமுக வளர்த்தது கல்லூரிகளில்தான். காமராஜர் காலத்தில் பள்ளிகள் அதிகம் தொடங்கப்பட்டது. அதேபோல் கருணாநிதி ஆட்சியில் கல்லூரிகள் அதிகம் தொடங்கப்பட்டது.

தற்போது நடைபெற்றுவரும் இந்த ஆட்சியில் உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி அதிக அளவு தொடங்க வேண்டும் என்பதே இலக்கு. அனைவருக்கும் பட்டம் என்பது இருக்க வேண்டும். அனைவரும் உயர்கல்வி கற்றிருக்க வேண்டும். இதை எட்டிய முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை

தமிழர்கள் தங்கள் அறிவால், திறமையால், வேலைவாய்ப்பால் உலக அளவில் வளர வேண்டும். சமூகத்தின் தொழிற்சார்ந்த தலைவர்களை கல்லூரி உருவாக்க வேண்டும். இங்கு ஆட்சி அமைத்தது தொடர்பாக பெரிய விவாதம் நடைபெற்றது. உங்கள் ஆட்சி, எங்கள் ஆட்சி என்று. இது நமது ஆட்சி.

ஆட்சி அமைத்த 100 நாள்களில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இருண்ட நிலையில் இருந்த தமிழ்நாடு ஒளி மையமான பாதைக்கு வந்துள்ளது. அனைத்துச் சமூகத்தினரை இந்த ஆட்சி அரவணைத்துச் செல்லும்.

இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருக்க வேண்டும். சிறந்த முதலமைச்சரில் முதல் இடம் என்பதைவிட நமது மாநிலம் முதல் இடம் என்பதே எனக்குப் பெருமை" எனத் தெரிவித்தார். முன்னதாக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் வாழ்த்துரை வழங்கியபோது, "1985இல் இந்தக் கல்லூரியில் பயிற்சிப் பெற்று விடுபட்டேன்.

முதலமைச்சர் பொறுப்பேற்கும்போது கரோனா எனப் பல நெருக்கடிகள். புத்தகப் பையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் உள்ளது. இதை மாற்ற கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்தார்கள். நான் முதலமைச்சர் என்று எல்லாருக்கும் தெரியும். அதை மாற்றி வீண் செலவு தேவையில்லை. தேவையில்லாத செலவைத் தடுப்பது நிர்வாகத்தின் முதல் திறமை.

நான் கல்லூரி படிக்கும்போது தலைமை ஆசிரியர் அறை முன்பு பாஸா அல்லது பையிலா என்று பார்க்க நிற்க வேண்டும். அதேபோல் தற்போது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தலில் வெற்றியா தோல்வியா என்று லயோலா கல்லூரி முன்பு நிற்க வேண்டியாத உள்ளது" என்றார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, "சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முதலமைச்சர் மக்கள் தலைவர் என்பதை நிரூபித்துள்ளார். நம்முடைய முதலமைச்சர் ஆற்றிய பணிகளே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கொடுத்துள்ளன. தயாநிதி மாறன் பேசும்போது, உங்கள் முதலமைச்சர் எனத் தெரிவித்தார். அவர் நமக்கும் முதலமைச்சர்தான்.

லயோலா கல்லூரியில் முன்பு எல்லாம் பொறியியல் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மூலம் சீட் கிடைக்கும் இதுவே சமூகநீதி எனவும், திராவிடர் கழகத்தின் சமூகநீதி தலைவராக முதலமைச்சர் இருக்கிறார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிவகுமார் நியமனம்!

Last Updated : Oct 16, 2021, 9:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.