ETV Bharat / city

முதலமைச்சர் கான்வாய் சென்ற போது கத்தியை காட்டியவரை பிடித்த காவலருக்கு பாராட்டு - முதலமைச்சர் கான்வாய்

முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய் சென்ற போது கத்தியை காட்டி கையசைத்தவரை பிடித்த காவலருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கான்வாய்
முதலமைச்சர் கான்வாய்
author img

By

Published : Apr 27, 2022, 8:06 AM IST

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய் நேற்று (ஏப்.26) இரவு அண்ணாசாலை அஜிஸ் முல்க் தெரு சந்திப்பு வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் கத்தியை காட்டியவாறு கையசைத்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரம் விளக்கு காவலர் அழகுமுத்துவையும் அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். எனினும் காவலர் அழகுமுத்து, அந்த நபரை பிடித்து கத்தியை பறிமுதல் செய்தார்.

விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (55). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் தனது தாய், தந்தை இறந்த பின்பு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது தம்பி, தங்கை அதே வீட்டில் இரண்டாவது தளத்தில் வசித்து வருகின்றனர் என்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறையினர் ராதாகிருஷ்ணனை அவரது தம்பி, தங்கையிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சாதுர்யமாக செயல்பட்ட காவலர் அழகு முத்துவை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இதையும் படிங்க: நளினி தடா-வில் தண்டிக்கப்பட்டாரா? - சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.