சென்னை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் சென்னை, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சதுப்புநில சூழலியல் பூங்காவினை காணொலி காட்சி வாயிலாக மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
176 வகையான பறவையினங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், ஒன்பது வகையான நத்தையினங்கள், ஐந்து வகையான ஓட்டுமீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாகவும், ஒட்டுமொத்தமாக 459 வகையான தாவரங்கள், விலங்கினங்களின் பரவலுக்கு இச்சதுப்பு நிலப்பகுதி உதவிகரமாக அமைந்துள்ளது.
2019-2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 313 பறவைகள் இந்நிலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. சதுப்புநில காட்டினைப் பாதுகாக்கும் வகையில் பள்ளிக்கரணை பகுதியினை சூழலியல் பூங்காவாக அறிவித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், துறையின் செயலர் சுப்ரியா சுலே, அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கடலோர மாவட்டங்களில் மிதமான மழை