ETV Bharat / city

நோய் முற்றிய பிறகு சென்றால் பலனில்லை - முதலமைச்சர் அறிவுறுத்தல் - ஆட்சியர்கள் கூட்டம்

சென்னை: பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டும் தான் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

meet
meet
author img

By

Published : May 29, 2020, 4:54 PM IST

Updated : May 29, 2020, 7:22 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது பற்றியும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதலமைச்சர், “தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் கரோனாவை தடுக்க முடியும். அனைவரும் தகுந்த இடைவெளியை, சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். நோய் முற்றிய பிறகு சென்றால் மருத்துவம் பலனளிக்காது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை மாநில பேரிடர் மேலாண்மை சார்பில் 14 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னை, கோவையில் கரோனாவை கட்டுப்படுத்த அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களுக்கான ரேஷன் பொருட்களும், வெளிமாநில தொழிலாளர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. 250 சமூக நலக் கூடங்களில் உள்ள 2 லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஊரக பகுதி மேம்பாட்டுக்கு கரோனா சிறப்பு நிதியாக ரூ.300 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நோய் முற்றிய பிறகு சென்றால் பலனில்லை - முதலமைச்சர் அறிவுறுத்தல்

இதையும் படிங்க: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Last Updated : May 29, 2020, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.