ETV Bharat / city

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி மறைவு - முதலமைச்சர் இரங்கல்!

சென்னை: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

wife
wife
author img

By

Published : May 2, 2020, 5:11 PM IST

இது தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், “தங்களின் அன்பு மனைவி திருமதி. கண்ணாத்தாள் இன்று (2.5.2020) உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

திருமதி. கண்ணாத்தாள் அவர்களை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் சிக்கியவருக்கு கரோனா தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.