ETV Bharat / city

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு - அரசு உத்தரவு - மருத்துவர்கள்

சென்னை: பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு மேலும் இரண்டு மாத பணி நீட்டிப்பு வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

nurses
nurses
author img

By

Published : Apr 25, 2020, 3:11 PM IST

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள் (Lab Technician), 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், 31.3.2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அதே போன்று, இம்மாதம் 30 ஆம் தேதி அன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் - அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.