ETV Bharat / city

தமிழகத்தில் முதலீடு செய்ய உலக தமிழர்களுக்கு அரசு அழைப்பு!

சென்னை: உலகத்தமிழர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் 'யாதும் ஊரே' இணையவழி மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

invites
invites
author img

By

Published : Oct 30, 2020, 9:14 AM IST

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கும் வகையிலும், இங்கு முதலீடு செய்வதில் உள்ள சாதக பாதகங்களை விவாதிக்கும் வகையிலும், 'யாதும் ஊரே' இணையவழி மாநாடு நடத்தப்படுகிறது.

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இணைய வழியில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, மொரிஷியஸ் உள்ளிட்ட 38 நாடுகளைச் சேர்ந்த தொழில்துறையினர், முதலீட்டாளர்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் முதலீடு செய்ய உலக தமிழர்களுக்கு அரசு அழைப்பு!

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. இதில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழர்கள் கலந்துரையாடுகின்றனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டை, தென்னிந்திய வர்த்தக சபையுடன் இணைந்து தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனம் நடத்துகிறது.

மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதில், தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் முதலீடு செய்ய கடல் தாண்டி உள்ள தமிழர்கள் முன் வரவேண்டும் என அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், இங்கு தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில், தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், தொழில் வழிகாட்டி துறை தலைமை செயல் அதிகாரி நீரஜ் மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மருத்துவக் கல்வி இட ஒதுக்கீடு பிரச்னை; மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.