ETV Bharat / city

மக்கள் நல்வாழ்வுத் துறை கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்துவைப்பு! - எடப்பாடி பழனிசாமி

சென்னை: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்துவைத்தும், மேலும் புதிய கட்டடங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

function
function
author img

By

Published : Jun 9, 2020, 1:58 PM IST

தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில், 24 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டடம், தீக்காய சிகிச்சைப் பிரிவுக் கட்டடம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்துவைத்தார்.

மேலும், 134 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் கட்டப்படவுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடம், தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்படவுள்ள புதிய கண் சிகிச்சைப் பிரிவுக் கட்டடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளுக்கு நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.