ETV Bharat / city

95 மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணை - முதலமைச்சர் வழங்கினார்!

சென்னை: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன திரவ பிராணவாயு கலனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

function
function
author img

By

Published : Nov 4, 2020, 2:03 PM IST

தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 35,000 லிட்டர் அளவு கொண்ட அதிநவீன பிராணவாயு கலனை காணொலி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணி ஆணைகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வேல் யாத்திரை தடை வழக்கு: நாளை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.