ETV Bharat / city

நெருங்குது தேர்தல்: தமிழ்நாடு வருகிறார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்! - சுனில் அரோரா

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்ய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வரவுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

sunil arora
sunil arora
author img

By

Published : Feb 5, 2021, 11:35 AM IST

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வருகிற 10, 11ஆம் தேதிகளில் சென்னை வர இருப்பதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், அரசியல் கட்சியினருடன், காவல் துறை மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், காவல் துறை இயக்குநர், அமலாக்கத் துறை அலுவலர்கள், அரசின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் சென்னை வந்து இரண்டு நாள்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தலை நடத்துவது குறித்தும், தற்போது அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்தும், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வரவுள்ளதால் அந்தந்த மாவட்டப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுவது குறித்தும் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுடன், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இரண்டு நாள் சுற்றுப்பயணமாகத் தமிழ்நாடு வரவுள்ளார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் காணொலி வாயிலாக தலைமைச் செயலகத்திலிருந்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் இறுதிசெய்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சோதனைசெய்து முடித்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: திரைப்பட விழாவில் ஜோடியாக விக்னேஷ் சிவன் - நயன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.