சென்னை: பல லட்சம் செலவில் ஏற்பாடு செய்த திருமணம், வெறும் 20 குடும்பத்தினரை கொண்டு மட்டுமே எளிய முறையில் நடந்தேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஏனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிகிதா- சந்தோஷ் ஆகியோரின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இன்று திருவேற்காட்டில் உள்ள பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வைக்கப்பட்டு இருந்தது.
குரங்குகளுக்காக குரல் கொடுப்போம்...
இதனிடையே கரோனா நோய்க் கிருமித் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாதால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி குறிப்பிட்ட ஆட்களை வைத்து மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் அனைத்து திருமணங்களும் எளிய முறையில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நிகிதா- சந்தோஷ் ஆகியோரின் திருமணம் எளிய முறையில் திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் பெண் வீட்டார் 10 பேரும், மணமகன் வீட்டார் சார்பில் 10 பேர் என மொத்தம் 20 நபர்கள் கலந்து கொண்டனர். பல லட்சம் செலவு செய்யப்பட்டு நடைபெற்ற இந்த திருமணத்தில் 20 பேர் மட்டுமே முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.
திருமணம் நடத்துவதற்காக முன் கூட்டியே மண்டபம் அலங்காரம் என அனைத்திற்கும் பணம் கொடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி திருமண மண்டபத்தில் அனைத்து அலங்காரங்களுடன் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பங்கேற்க முடியாத குடும்பத்தினருக்கு காணொலி காட்சி மூலம் இந்நிகழ்வைக் கண்டுகளிக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு.