இது குறித்து ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1. சென்னை கடற்கரையிலிருந்து பகல் 12:40 மணிக்கு சூளூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
2. சென்னை சென்ட்ரலிலிருந்து மதியம் 02:35 மணிக்கு சூளூர்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
3.சூளூர்பேட்டையிலிருந்து மதியம் 03:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில் சூளூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்.
4.சூளூர்பேட்டையிலிருந்து மாலை 05:15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் சூளூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியிலிருந்து இயக்கப்படும்.
புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை அறிந்து பயணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.