ETV Bharat / city

எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுங்க- பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் பகீர் ஆடியோ - வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர்

சென்னை தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர், மாணவியிடம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுங்க- பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் பகீர் ஆடியோ

author img

By

Published : Jun 29, 2022, 12:39 PM IST

Updated : Jun 29, 2022, 1:35 PM IST

சென்னை: கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு அவர் மீது 7 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் சென்னை அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் அத்துமீறிய சம்பவம் நடந்துள்ளது. சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவர் அப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகளின் பெற்றோர் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கரோனா பொது முடக்கம் அமலிலிருந்தபோது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளின் தொடர்பு எண்கள் அனைத்தையும் ஆசிரியர் ஸ்ரீதர் சேமித்து வைத்துக்கொண்டதாகவும், அதன் பின்னர் பள்ளி மாணவிகளிடம் நாம் இருவரும் வெளியே செல்லலாம் எனக்கூறி குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் பெற்றோர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் என்ற அடிப்படையில் நம்பி அவருடன் வெளியே சென்ற மாணவிகளிடம் ஸ்ரீதர் ராமசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஏராளமான மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும் வகுப்பறையில் யாருமில்லாத போது ஸ்ரீதர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வேதியியல் ஆசிரியரான ஸ்ரீதர் மாணவிகளுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நலக் குழு பள்ளியில் ஆசிரியர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுங்க- பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் பகீர் ஆடியோ

பள்ளி சார்பிலும் ஆசிரியர் ஸ்ரீதர் ராமசாமி மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாகக் குழந்தைகள் நலக் குழு மற்றும் பள்ளி சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:POCSO Law: தனியார் பள்ளிகளிலும் விழிப்புணர்வு - அன்பில் மகேஷ்

Last Updated : Jun 29, 2022, 1:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.