சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆண் வாக்காளர்களுக்காக 278, பெண் வாக்காளர்களுக்காக 278 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்காக 5ஆயிரத்து 266 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5ஆயிரத்து 822 வாக்குச்சாவடிகளை மாநகராட்சி அமைத்துள்ளது.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் 1 முதல் 15 வரை மற்றும் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவிருக்கும் வாக்குச்சாவடி குறித்த விவரத்தைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: கட்டுமர அணிவகுப்பை தொடங்கி வைத்தார் புதுச்சேரி முதலமைச்சர்