ETV Bharat / city

செல்போனில் பேசி நூதனக் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் - காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஆசையைத் தூண்டும் வகையில் செல்போனில் பேசி நூதனமாக வங்கிக் கணக்கு மூலம் பணத்தைத் திருடும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

viswanathan
viswanathan
author img

By

Published : Feb 7, 2020, 5:29 PM IST

வங்கிப் பரிவர்த்தனைகளை மிகவும் எச்சரிக்கையான முறையில் பொதுமக்கள் கையாள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, காவல்துறை மற்றும் ஆக்ஸிஸ் வங்கி இணைந்து தயாரித்த ’வாய்க்கு போடுங்க பூட்டு’ என்ற குறும்படத் தகட்டினை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், “வங்கிப் பரிவர்த்தனைகளை பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் எப்படி கையாள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடித்துள்ளனர்.

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் அடையாளம் தெரியாத நபர் போனில் பேசி வங்கியின் கடவு எண்கள் மூலம் பணம் உள்ளிட்டவற்றை திருடுகின்றனர். மேலும், பொதுமக்களிடம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறியும் மோசடியில் ஈடுபடுகின்றனர். லோன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை தற்போது மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடம் வங்கி தொடர்பான கடவு எண்கள், கணக்கு எண்கள் உள்ளிட்டவற்றை எந்த ஒரு வங்கி அதிகாரிகளும் கேட்கமாட்டார்கள். அவற்றை யாரிடமும் பகிரக் கூடாது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்“ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி - திமுக பிரமுகர் உள்பட மூவர் கைது!

Intro:Body:வங்கி பரிவர்த்தனைகளை மிகவும் எச்சரிக்கையான முறையில் பொதுமக்கள் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை மற்றும் ஆக்ஸிஸ் வங்கி இணைந்து வாய்க்கு போடுங்க பூட்டு என்ற குறும்படத்தின் தகட்டினை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்

வங்கி பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக முறையில் பொதுமக்கள் எப்படி கையாள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த குறும்படத்தில் மத்திய குற்ற பிரிவு போலீசார் நடித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பாக பொதுமக்களின் ஆசையை தூண்டும் வகையிலும்,பயத்தை உண்டு பண்ணும் வழியிலும் அடையாளம் தெரியாத நபர் பேசி வங்கியின் கடவு எண்கள் ஆகியவற்றை திருடுகின்றனர்.மேலும் பொதுமக்களிடம் பரிசு விழுந்திருப்பதாக கூறியும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.மேலும் லோன் வாங்கி தருவதாக பொதுமக்களின் ஆசையை தூண்டி வேலையாக செய்யும் 4பேர் கொண்ட கும்பலை தற்போது மத்திய குற்றபிரிவு போலீசாரும் கைது செய்துள்ளனர்.மேலும் பொதுமக்களிடம் கடவு எண்கள்,கணக்கு எண்கள் உள்ளிட்டவற்றை எந்த ஒரு வங்கி அதிகாரிகளும் கேட்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும் ஆன்லைன் குற்றங்கள் கண்டுப்பிடிப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் மத்திய குற்றபிரிவு 80 சதவீதமான குற்றங்கள் வங்கி மோசடி தொடர்பான குற்றங்களாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.