ETV Bharat / city

குடிசை மாற்று வாரிய பகுதிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்களே குற்ற செயலில் ஈடுபடுகின்றனர் - சங்கர் ஜிவால்

குடிசை மாற்று வாரிய பகுதிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்களே பெருமளவில் குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

18 வயதிற்கு உட்பட்ட நபர்களே பெருமளவில் சென்னையில் குற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்

author img

By

Published : May 6, 2022, 11:59 AM IST

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மாநகர மேம்பாட்டுக் குழுவின் முதல் கூட்டத்தொடர் நேற்று(மே.05) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலர் கோவிந்த ராவ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரிம்ஸ் மூர்த்தி, ஜேஜே எபினேசர், பிரபாகர் ராஜா, மோகன், சாமுவேல், காரப்பாக்கம் கணபதி, டாக்டர் எழிலன், மயிலை த வேலு, அரவிந்த் ரமேஷ், உட்பட துறையைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை வாழ்விடம் மேம்பாட்டு குழு உறுப்பினர் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர்,"சென்னை மாநகர வாழ்விட மேம்பாட்டு குழு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று(மே.05) முதல் கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு பகுதியில் அடிக்கடி பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் பல்வேறு பிரச்சனைகள் கண்டறியப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் சேர்ந்து உள்ள குப்பைகளை அகற்ற மெகா அளவில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளோம்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,"குடிசை மாற்று வாரிய பகுதிகளிலேயே 18 வயதிற்கு உட்பட்ட நபர்களே பெருமளவில் சென்னையில் குற்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவற்றை கண்காணிக்க முழு முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நகர்ப்புற வாழ்வியல் பகுதியில் உள்ள சிறார் குற்றங்களை தடுக்க பறவை என்ற சிறுவர் சீர்திருத்த அமைப்புகளை உருவாக்கி உள்ளோம். சென்னையில் உள்ள பெரும்பாலான குடிசை மாற்று வாரியங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக இதனை கட்டுப்படுத்த பெற்றோர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதேபோல் சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய கிரிமினாலஜி துறையின் உதவியுடன் குற்ற சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம்.

சென்னையில் உள்ள குடிசை மாற்று குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் தன்னார்வலர்கள் உடன் சேர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது" என தெரிவித்தார். கடைசியாக பேசிய நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு குழு உறுப்பினர் செயலாளர் கோவிந்த ராவ்,"சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள சேதமடைந்த 28,000 குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது.

குறிப்பாக சேதமடைந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்கி அவர்களை அப்புறப்படுத்திய பின்னர் சேதமடைந்த குடியிருப்பு பகுதிகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதிக்கு அமைச்சர் பதவி ? எப்போது முடிசூட்டு விழா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.