ETV Bharat / city

வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது சுவர் இடிந்து விபத்து - ஊழியர் உயிரிழப்பு! - சென்னையில் சுவர் இடிந்து விபத்து

பட்டினப்பாக்கத்தில் வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது, சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.

chennai
chennai
author img

By

Published : Sep 10, 2022, 5:55 PM IST

சென்னை: சென்னை எம்.ஆர்.சி நகர் கற்பகா அவன்யூ பகுதியில், தனியார் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் வீடு உள்ளது. அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகள் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கேயே தங்கி, பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று(செப்.10) காலை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள மதில் சுவரை இடிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, சுவர் திடீரென சரிந்து விழுந்ததில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு ஊழியரான வாசு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த முத்துக்கிருஷ்ணனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது - காவலர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.