சென்னை தாம்பரம் ராஜாஜி சாலையில் கடந்த ஒரு மாதம் முன்பு பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தன. கட்டமைப்புப் பணிகள் முடிந்து மேலே மணலால் மூடப்பட்டு சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.
இந்நிலையில் நேற்று (ஜன. 05) பெய்த கனமழையின் காரணமாக பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளமானது சேறும் சகதியுமாய் மாறியது. இதில் தடம் எண் 89 T குன்றத்தூர் முதல் தாம்பரம் வரை செல்லும் மாநகரப் பேருந்தின் சக்கரம் சிக்கி விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
முறையாகப் பாதாள சாக்கடைப் பணிகளை மூடாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. பேருந்தை மீட்கும் பணியில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்