சென்னை வானிலை ஆய்வு மையம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று இலங்கைக்கு தென்கிழக்கே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிக்கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி இன்று இந்தியப் பெருங்கடல், அதனை ஒட்டியுள்ளப் பகுதியில் நிலவுவதால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலையும் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை கடந்த 1ஆம் தேதி முதல் இன்றுவரை இயல்பைவிட 14 விழுக்காடு குறைவாக மழையின் அளவு பதிவாகியுள்ளது. கோவை, ராமநாதபுரம், கடலூர், காஞ்சிபுரம், ஈரோடு, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 48 மணிநேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீன்கள் ருசியானவை... மீனவர்களின் வாழ்க்கை...?