ETV Bharat / city

‘தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்!

author img

By

Published : Jan 17, 2021, 3:45 PM IST

சென்னை: தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால், தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால், தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அதேபோன்று 18,19,20ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்) அதிகபட்சமாக புதுக்கோட்டை, கன்னியாகுமாரி, இளையான்குடி, அம்பாசமுத்திரம், மானாமதுரை, மணமேல்குடி பகுதிகளில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...டிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.