சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இன பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி மேயர் பதவி
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியல் இனத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டியல் இன பெண்களுக்கு முன்னுரிமை
இதில், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் பட்டியல் இனப் பெண்களுக்கும், ஆவடி மாநகராட்சி பட்டியல் இனத்திலுள்ள இருபாலருக்கும் (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் சென்னை மாநகராட்சியின் மேயராக உதயநிதி ஸ்டாலின் ஆக வாய்ப்புள்ளதாக வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஒதுக்கீடு
விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட சிவகாசி, செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற மாநகராட்சிகள்
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: 'மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தரவேண்டும்' - மாடுபிடி வீரர் கார்த்திக் கோரிக்கை!